தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
தாம்பரம்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்கள் வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரவில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின்னர், தாம்பரம் – விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ரயில்கள் தற்போது வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணியரின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் – விழுப்புரம் பயணியர் ரயில் வரும் 16ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தொற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல, மறு மார்க்கத்தில் விழுப்புரம் – தாம்பரம் பயணிகள் ரயில், வரும் 17ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.