சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது?- யுஜிசி சுற்றறிக்கை சொல்வது என்ன?

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே மாதம் நடந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அந்தந்த மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கையை முன்பே முடித்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் மாணவர்கள், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.