சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை.
நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்குமாறு சிறிலங்காவின் பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த நடவடிக்கைக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சமீப காலங்களில் பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறுபவர்கள் நாட்டில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலரை கொலை செய்ததோடு, பொது மற்றும் தனியாரது சொத்துக்களையும் அழித்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கோரிக்கை விடுத்துள்ளது.