கோத்தபாய ராஜபக்ஸ மாலைதீவு அரசிடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நள்ளிரவு மாலைதீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறன நிலையிலேயே, பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்யாத நிலையில் தற்போது மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து, தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று இவருக்காக சில மணி நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மாலைதீவு தலைநகர் மாலேயில் உள்ள வேலனா (Velana International Airport) சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
மாலேயில் இருந்து சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயணத்தை எளிதாக்கும் வகையில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு நேரப்படி 23. 25 மணிநேரத்திற்கு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் புறப்படுவார் என நம்பப்படுகிறது.
இலங்கை நேரப்படி 23.55 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.