இரு நாட்களுக்குச் சேவைகளை இரத்துச் செய்த அமெ. தூதரகம்!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது சேவைகளை இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்துள்ளது.
மிகுந்த எச்சரிக்கையுடன், தூதரகம் (புதன்கிழமை) பிற்பகல் சேவைகளையும் (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் மற்றும் என்ஐவி பாஸ்பேக்) இன்று (வியாழக்கிழமை) அனைத்து தூதரக சேவைகளையும் இரத்துச் செய்துள்ளது.
இது தொடர்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்துக்கும் தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இரத்துச் செய்யப்பட்ட அனைத்து சந்திப்புகளையும் மீண்டும் திட்டமிடவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்தச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.