ரணில் உடன் பதவி விலக வேண்டும்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.