ஐதேக தேசிய பட்டியல் சீட் ரணிலுக்கு கிடைக்கும் அறிகுறி !

பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சிக்காக தேசிய பட்டியலில் கிடைக்கப்பெற்ற எம்பி பதவிக்கு தான் நியமிக்கப்படுவதில்லை என இதற்கு முதல் விக்ரமசிங்க தெரிவித்திருந்தாலும் அந்த பதவிக்கான தகுதியான நபர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு UNP க்கு இதுவரை முடியவில்லை. UNP தலைவர் அந்த பதவியை பொறுப்பேற்காவிட்டால் அந்த பதவிக்காக முன்னாள் எம்பிக்கள் பலர் முன்னிலையாகியிருப்பதே அதற்கான காரணமாகும்.

இதற்கமைய UNP தலைவர் தனது வழக்கமான வடிவக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தலைமையை மட்டுமல்ல, கட்சி தனது பெயரில் வென்ற ஒரே இடத்தையும் தனது பெயரில் எழுதுவதற்கு தயாராகிறார்.

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை பரிந்துரைக்கும் பிரேரணை இன்று செயற்குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ளது, அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

இதுவரை ஒவ்வொரு கட்சியும் வென்ற தேசிய பட்டியலின் 27 எம்பி பதவிகளும் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டு அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன் UNP மற்றும் அபே ஜன கட்சியிற்கும் கிடைக்கப்பெற்ற எம்பி சீட் இரண்டிற்குமான நியமனங்கள் அந்தக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட உள் நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.