மாலத்தீவுக்கு வந்திறங்கிய தனியார் ஜெட் மூலம் கோத்தா சிங்கப்பூர் செல்ல தயார்!
மாலைதீவு தலைநகர் மாலேயில் தனியார் ஜெட் விமானம் தரையிறங்கியுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் சில நிமிடங்களில் சிங்கப்பூர் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்சே, அவரது மனைவி அயோமா ராஜபக்ச மற்றும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் நேற்று இரவு மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் திட்டமிட்டபடி பயணம் செய்யவில்லை.
ராஜபக்ச மாலைதீவை விட்டு வெளியேற ஒரு தனியார் ஜெட் விமானத்தை கோரி இருந்தார். அது குறித்து மாலைதீவு அதிகாரிகள் நேற்று இரவு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
அதன் பிரதிபலனாக ஒழுங்கு செய்யப்பட்ட ஜெட் விமானம் சில நிமிடங்களுக்கு முன்னர் வெலன சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ச இன்னும் சில நிமிடங்களில் மாலைதீவை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் ஜனாதிபதி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட உள்ளார்.