அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்பட வேண்டும்! அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகிறது!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நிதானமாக செயல்படவும், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் தீர்வுகளுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டின் நலனுக்காக பாடுபடவும் மீண்டும் மீண்டும் கூறுவதாக அவர் கூறுகிறார்.
அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாகக் குறிப்பிடும் அமெரிக்கத் தூதர், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் படி, அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக ஆட்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமைதியான அதிகார பரிமாற்றம் இன்றியமையாதது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(2/2) We condemn all violence & call for the rule of law to be upheld. A peaceful transfer of power within SL’s democratic & constitutional framework is essential so the people’s demands for accountability, transparency, democratic governance & a better future can be realized.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 13, 2022