நேற்றைய தினம் “பாராளுமன்றத்தை முற்றுகையிட வாருங்கள்” என லால்காந்த விடுத்த அழைப்பு (Video)

நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் வாருங்கள் வந்து பாராளுமன்றத்தை முற்றுகையிடுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு இறுதிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என லால்காந்த குறிப்பிடுகின்றார். சுனில் ஹந்துன்நெத்தியையும் அங்கே காணப்படுகிறார்.