ரேசன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.. முழு விவரம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் மக்களுக்கு வழங்கக்கூடிய அடிப்படை ஆவணம் தான் ரேசன் கார்டு. ஏழை, எளிய மக்களின் அடிப்படை உணவுத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரிசி, பருப்பு, சீனி, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற அனைத்து உணவுப்பொருள்களையும் மலிவு விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலம் வாங்கி பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாட்டின் 10 கோடி ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் நடைமுறையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என கூறப்படுகிறது.

ஆயுஷ்மான் கார்டு பெற தகுதியுடையவர்கள் யார்?

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்த அந்த்யோதயா கார்டை வைத்திருக்கும் நபர்கள் மட்டும் தான் வைத்திருப்பவர்களுக்கு இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எனவே தகுதியுள்ள நபர்கள் மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் உள்ள சமூக சுகாதார நிலையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இதோடு மட்டுமின்றி அரசு சார்பில் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி வரை பிரச்சாரம் நடத்தப்படும் எனவும், இந்த பிரச்சாரத்தின் உதவியோடு அந்த்யோதயா அட்டைகள் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆயுஷ்மான் அட்டைகளை உருவாக்குவதே இதன் இலக்கு என அரசு தெரிவித்து வருகிறது.

ஆயுஷ்மான் கார்டை எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

அரசு அறிவித்துள்ள எந்தவித நலத்திட்டங்களும் உரியவர்களுக்கு சென்றடைவதில்லை என்பதற்கேற்றால் போல் தான், அந்தியோதயா ரேசன் கார்டு அட்டைத்தாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்கான ஆயுஷ்மான் கார்டை மக்கள் பெறாமல் இருக்கின்றனர்.

எனவே அரசு வழங்கவுள்ள மருத்துவக் காப்பீட்டு அட்டையை பெற வேண்டும் என்று நினைக்கும் தகுதியான நபர்கள், தங்களது உங்களது அந்த்யோதயா கார்டைக்காட்டி இ- சேவைகளில் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் மட்டுமே வழங்கப்படும் இந்த ஆயுஷ்மான் கார்டை பயன்படுத்தி பொது சேவை மையம், சமூக சுகாதார மையம், ஆயுஷ்மான் குழு அல்லது மாவட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்கள் எந்த வித மருத்துவப் பிரச்சனை ஏற்பட்டாலும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியதில்லை என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.

இந்த நடைமுறை என்பது அனைவருக்கும் பொருந்தாதது எனவும் ஏற்கனவே அந்த்யோதயா கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆயுஷ்மான் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய ஆயுஷ்மான் கார்டுகள் அரசாங்கத்தால் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.