சவூதி விமானத்தில் வெளியேறிய கோட்டாபய ஜெட்டாவுக்கு
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மாலத்தீவை விட்டு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியேறினார்.
அவர் சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும், அவர் சிங்கப்பூருக்கும் பின்னர் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கும் செல்வார் என மாலத்தீவு அரசாங்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கோட்டாவை ராஜினாமா செய்யக்கோரி அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதால், புதன்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து ராஜபக்ச வெளியேறினார்.
ஜனாதிபதி மாலைதீவுக்கு தப்பிச் சென்றதன் பின்னர் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.