ஜனாதிபதி நாட்டில் இல்லை என்பதால் பதவி விலகியதாக கருத முடியாது : பிரதாபா மஹாநாம ஹேவா
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஜனாதிபதி தனது சேவையை கைவிட்டதாக கருதுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். சிறப்பு கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே இக் கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சபாநாயகரிடம் ஒப்படைக்காததால், ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகியதைப் போன்று நடத்துவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா என ஆராய்வதாக மகிந்த யாப்பா அபேவர்தன இன்று உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் அருண பேராசிரியர் சட்டத்தரணி பிரதாபா மஹாநாம ஹேவாவிடம் வினவிய போது, தொழிலாளர் சட்டம் தொடர்பான “விடுமுறை” வழங்குவதை இங்கு பிரயோகிக்க முடியாது என அவர் கூறினார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி 37/1ன் கீழ் ஜனாதிபதி ஒருவர் சுகயீனமாகவோ அல்லது வெளிநாடு சென்றோ உள்ள போது அவருடைய பணியை செய்வதற்கு பதில் ஜனாதிபதி ஒருவரை அவரால் நியமிக்கலாம்.
அதே சமயம் இப்படியான காலம் எதுவரை என யாப்பில் குறிப்பிடப்படவில்லை.
இங்குள்ள ஒரு பலவீனம் உப ஜனாதிபதி ஒருவர் இல்லாமை.
அதனால்தான் அந்த பதவிக்கு பிரதமர் நியமிக்கப்படுகிறார். அவருடைய காலத்தை முடிவு செய்ய ஜனாதிபதிக்கு உரித்துள்ளது. ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க முடியாது. அவர் பதவியில் இல்லை என்பதை அவரது கையெழுத்தில் கடித மூலம் சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒரு கடிதமும் இல்லாமையால் , பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துதான் அகற்ற முடியும்.
பேராசிரியரின் முழுப் பார்வையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.