கோட்டாவின் தலைவிதியை இறுதியில் தீர்மானித்தது ஷரியா சட்டம் ..!
நாட்டை ஆட்சி செய்யும் போது (உத்தியோகபூர்வமாக பதவி விலகாமல்) நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய அமெரிக்காவின் முன்னாள் பிரஜையான அமெரிக்காவும் கூட நாட்டுக்குள் வர அனுமதிக்காமல் , பெரியண்ணன் இந்தியாவும் தனது நாட்டிற்குள் கால் பதிக்க கூட அனுமதிக்காத, ஒரு நாட்டின் 97% மக்களால் எதிர்ப்பு தெரிவித்து உலகிலேயே மோசமான ஆட்சியாளர் என்று சபிக்கப்பட்டு தப்பி ஓடிய கோட்டாபய ராஜபக்ச, இறுதியாக முஸ்லிம் ஷரியா சட்டத்தால் ஆளப்படும் சவூதி அரேபியாவில் ஷரியா சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பென் அலி போல ஓ.. நந்தசேன கோட்டா..!
24 ஆண்டுகளாக துனிசியாவைத் திருடிய பென் அலியும் , கோட்டாவைப் போலவே, 2011 இல் துனிசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் 2019 இல் இறக்கும் வரை பென் அலியும் சவுதி அரேபியாவில் இருந்தார்.
பென் அலியைப் போன்று கோட்டாபயவும் சவூதியில் வாழ்ந்தால் அவருக்கு சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள ஷரியா சட்டத்தின் படி சட்ட பாதுகாப்பு, வசதிகள், பாதுகாப்பு கிடைக்கும். ஓ…மை கோட் நந்தசேன..!!
முஸ்லிம் தீவிரவாதத்தை உருவாக்கி அதிகாரத்தைப் பெற்று 300 கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டினரையும் கொன்று, 500க்கும் மேற்பட்ட மக்களை நிரந்தரமாக ஊனமாக்கி நாட்டில் பெரும் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்கி 70 வீதமான சிங்கள பௌத்தர்களை மூளை சலவை செய்து பதவிக்கு வந்த நந்தசேன கோட்டாபயவுக்கு இது தலைவிதி.
ருவான்வேலியிலும், மக்காவிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதை ஒரு சமூக வலைதள நபர் மிக எளிமையாக மிக அற்புதமாக குறிப்பிட்டுள்ளார்.
“ருவான்வேலிசாயாவில் பதவி ஏற்று, மக்காவில் பதவி துறந்த, கோட்டா, நீங்கள்தான் நன்றாகவே செய்தீர்கள்.”
கடந்த 13ஆம் திகதி அதிகாலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்து மாலா தீவிற்கு தப்பிச் சென்ற கோட்டாபய சவுதி அரேபியாவிற்கு சொந்தமான SV 788 ரக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சர்வதேச ஊடகங்களின்படி, இன்று உலகில் அதிகமான மக்களால் ‘ஆன்லைனில் ட்ராக்’ செய்யப்பட்ட விமானமும் இதுதான். அந்த விமானம் மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் இருந்து வேறு ஏதேனும் விமானத்தின் மூலமாகவோ கோட்டாபய சவூதி அரேபியா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபயவின் மாலைதீவு ஹோட்டல் பில் 22.5 லட்சம் இலங்கை அரசால் செலுத்தப்பட்டதா?
இதேவேளை, கடந்த 13ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஒரே ஒருநாள் அவர் தங்கியிருந்த தென் மாலத்தீவில் உள்ள சுப்பர் ஹோட்டலில் ஒரு இரவுக்கான கட்டணம் இலங்கைப் பணத்தில் 22.5 இலட்சம் ரூபா என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மக்கள் குழந்தைகளுக்கு ஒரு பெட்டி பால்மா வாங்க 1000 ரூபாய் கிடைக்காத நிலையில், இந்த திருடன் ஒரு இரவை கழிக்க 22.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். கோட்டாபய இன்னும் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யாததால், இதற்கான செலவை இலங்கை அரசு ஏற்றிருக்க வேண்டும். அவரது முறைகேடான வாரிசான ரணில் ராஜபக்ச, இலங்கையின் பொதுப் பணத்தில் கோட்டாபயவின் கட்டணத்தை நிச்சயம் செலுத்துவார். இது குறித்து நாட்டின் எதிர்க்கட்சிகள் ரணிலிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
கோட்டாபயவை கைது செய்ய சர்வதேச பிடியாணை..!
இதற்கிடையில், பிரித்தானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சர் எட் டார்வி, “சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்” என்று அந்நாட்டு சபாநாயகரிடம் நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்.
கோட்டாபயவின் இராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக இந்த அறிக்கை தயாரிக்கும் போது கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு இவ்வாறானதொரு கடிதம் கிடைத்துள்ளதாகவும், அது உண்மையான கடிதமா என கோட்டாபயவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகரின் ஊடக செயலாளர் இந்துனில் அபேவர்தன தெரிவித்துள்ளார். நாளை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்திய பின்னர் சபாநாயகர் , கோட்டாபயவின் பதவி விலகலை நாட்டுக்கு அறிவிப்பார் என நம்புவோம்.
நன்றி: lankaenews
தமிழில்: ஜீவன்