தன் வீட்டுக்கே தீ வைத்த ரணில், சிறிகொத்தவையும் தீவைக்க தயாராகிறாரா? (Video)

நாட்டின் எதிர்காலத்திற்கான இந்த முக்கியமான தருணத்தில், எந்த வெளிச் சூழலையும் உணராத, தனது தனிப்பட்ட குறுகிய அதிகார வெறிக்காகவும், ராஜபக்ஷக்களின் பாதுகாப்பிற்காகவும் எதையும் செய்யத் துணிந்த அரசியல் முதலை, ரணில் ராஜபக்ச தனது வீட்டிற்கு தீ வைத்துள்ளார். மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தை ஒடுக்குவதற்கு களம் அமைக்கும் ஆபத்தான சதித்திட்டம் குறித்து ‘லங்கா ஈ நியூஸ் உள் தகவல் சேவை’ தகவல் தெரிவிக்கிறது.

ஐதேக தலைமையகமான சிறிகொத்தவிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்றது ஏன்?

கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு தீ வைப்பதற்கு முன், அவர் தனது சிறந்த புத்தகங்களை இராணுவத்தால் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் (இதற்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். ரணில் அவை பற்றி பேச்சே இல்லை.)

அண்மையில் சிறிகொத்தவில் உள்ள பெறுமதியான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. (இது பொய்யானால், யாரேனும் சென்று பார்க்கலாம்)

சிறிகொத்தாவை தீப்பற்றி எரிய வைக்கும் குறுகிய திட்டம்..

நாட்டில் பாரிய அரசியல் சீர்திருத்தங்களைக் கோரி போராடும் , அமைதியான மக்கள் அரசாங்க அதிகார மையங்களை சுற்றி வளைத்துள்ளனர், அரசியல் கட்சிகளின் மையங்களைத் சுற்றி வளைத்ததில்லை. அவ்வாறிருக்க, சிறிகொத்தேவில் இருந்து பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் தேவை ரணிலுக்கு இருக்க முடியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினரே அவர் சிறிகொத்தவையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் , சிறிகொத்தாவில் உள்ள முக்கியமான பொருட்களை அகற்றும் போது , இப்படி ஒரு திட்டம் உள்ளதோ என சந்தேகமாக இருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது என்கிறார்கள்.

‘சிறிகொத்த’ உருவானது எப்படி?

மதிப்பிற்குரிய ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான சேர் ஜோன் கொத்தலாவல தனது தனிப்பட்ட பணத்தில் கட்சி தலைமையகத்திற்காக கொள்வனவு செய்த கொள்ளுப்பிட்டி கட்டிடத்திற்கு ‘சிறிகொத்த’ என்று பெயர். ‘சிறிமத் கொத்தலாவல’ என்ற பெயர்களின் கலவையாக ‘சிறிகொத்த’ என்று பெயர் வழங்கப்பட்டது.

பின்னர் ஜே.ஆர். ஜயவர்தன தற்போதைய பிட்டகோட்டை இடத்தை கட்சித் தலைமையகத்திற்கு எடுத்து புதிய கட்டிடம் ஒன்றை கட்டி அங்கு ‘சிறிகொத்த’வை நிறுவி , மேற்கூறிய சேர் ஜோனின் கட்டிடத்தை தேசிய ஊழியர் சங்கத்திடம் கையளித்தார்.

முன்னாள் ஐ.தே.க தலைவர்கள் தமது கட்சிக்கு சொத்து சேர்த்தது இப்படித்தான். இப்போது அதனை எரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு திட்டமிட்டு செயற்படுவது எவ்வளவு கேவலமானது என்பதை தற்போதைய ஐ.தே.க தலைவர் சிந்திக்க வேண்டும்.

ரணில் வீட்டிற்கு தீ வைத்ததற்கான ஆதாரம்; 7 கேள்விகள்..

ரணிலின் வீட்டுக்குத் தெரிந்தே தீவைக்கப்பட்டது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
அவை……

1. ரணில் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்திய மக்கள் மீது , வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன், ஜனாதிபதி மாளிகையை விட அதிகமான கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு, அதை நேரலையில் செய்தி வெளியிட்ட சிரச தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் STF படையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இளம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட விதத்தை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் ரணில் அதற்கும் சிரச தொலைக்காட்சி மீது குற்றம் சாட்டினார். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அங்கு வந்து இருவரையும் தாக்கினர். அவர்களில் ஒருவரான காளிமுத்து சந்திரனின் கை உடையும் வகையில் தாக்கப்பட்டார். ரணில், பிரதமர் என்ற முறையில் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்குத் தனது ஆட்சேபனையை மட்டுமல்ல , சிறிதும் கவலையோ வருத்தமோ கூட தெரிவிக்கவில்லை. அது ஏன்? ஏனென்றால், தாக்குதல் பற்றி அவருக்குத் தெரியும். தீ வைப்பு ஊடகங்களால் ஒளிபரப்பாவதை தடுக்க, முன்னரே ஊடகவியலாளர்களைத் தாக்கி விரட்டியடிப்பதற்காக இது செய்யப்பட்டது.

2. அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு , அங்கிருந்து தாக்குதலை நடத்தியவர் வேறு யாருமல்ல, பிரதமர் ரணிலின் சொந்தப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான STF பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே.

இந்தப் பதவியை வைத்திருப்பவர் எந்த வகையிலும் போராட்டக்காரர்களைக் கலைக்க மைதானத்திற்கு வருபவர் அல்ல. இயக்குனர் ரொமேஷ் லியனகே புல்லர்ஸ் சாலையில் உள்ள STF தலைமையகத்தில் இருக்க வேண்டும்.

தான் பாதுகாத்து வந்த வி.வி.ஐ.பி நபர் (ரணில்) அங்கு இல்லை என தெரிந்தும் ரொமேஷ் லியனகே அங்கு சென்றது ஏன்..?

தீவைப்பு சதியை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவா? ஊடகவியலாளர்களை தாக்க உத்தரவு பிறப்பிக்க முன், அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பைப் பெற்றுக்கொண்ட ரொமேஷ் லியனகேவை பைத்தியக்காரனைப் போல் அடிக்க உத்தரவிட்டார். ரொமேஷை தாக்க அறிவுறுத்திய அழைப்பு யாரிடமிருந்து வந்தது? ரணில் இல்லை என்றால் ரணில் , தற்போது பதில் ஜனாதிபதியாக இருப்பதால் அந்த கோண் கோல் யாரிமிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்து மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டும்.

3. அன்று, போராட்டக்காரர்கள் கடைசித் தடையை அகற்றுவதற்கு முன்னரே, வீட்டு தீ சுவாலையாக எரியத் தொடங்கியது. வீட்டிற்கு தீ வைத்தவர்கள் மற்றும் சுவரில் இருந்து தரையில் ஏறி கீழே இறங்கும் நபர்களை போலீசார் உதவி செய்து அழைத்துச் செல்வதை வீடியோக்கள் காட்டுகின்றன. அவர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என அடையாளம் காண முடிகிறது. இப்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் 19, 20 வயதேயான சிறுவர்கள். தீவைத்து விட்டு சுவரின் வழியாக இறங்கியவர்கள் அவர்களில் இல்லை. இது குறித்து பொலிஸாரோ ரணிலோ மூச்சே இல்லை. அப்படியானால் சுவர் வழியாக இறங்கி வந்தவர்கள் எங்கே..?

4. தீ மூட்டுவதற்கு முன்பே, தண்ணீர் பீச்சியடிக்கும் பௌசர்கள் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை அடித்து துரத்தினர். ஆச்சரியம் என்னவென்றால், நாட்டின் பிரதமர் வீடு தீப்பற்றி எரிந்தபோது, ​​ஒரு தண்ணீர் பீச்சும் பீரங்கி கூட அந்த வீட்டை நோக்கித் திருப்பி, தண்ணீரை வீசியெறிந்து தீயை அணைக்க முயலவில்லை. அது தீயை எரிய விடுமாறு அறிவுறுத்தப்பட்டதாலா?

5. ரணிலின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் பார்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அயலவர்கள் என பலரும் எமக்கு தெரிவித்த தகவலின்படி, அது திடீரென ஏற்பட்ட பெரும் தீ. மிரிஹானவில் பேருந்தை கொளுத்தியதைப் போன்று இந்த தீயும் ஓரேயடியாக தீ சுவாலையானது. எரிபொருள் அல்லது எரியக்கூடிய இரசாயனத்தால் மூட்டப்பட்ட தீ என்று பொருள். கிளர்ச்சியாளர்ளிடம் அது போல எதுவும் கையில் இல்லை. பிரதமர் வீட்டில் தீயிட என்ன பயன்பட்டது என விசாரணை நடத்தப்பட்டதா? அவ்வாறு செய்திருந்தால், அந்த அறிக்கையை ஏன் இன்னும் வெளியிடவில்லை? தீப்பிடித்தது பிரதமர் வீடு. அதிகாரிகளை யாரும் அமைதியாக இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்களா? அப்படியானால், அந்த ஆலோசனையை வழங்கியது யார்? ரணில் இல்லை என்றால் இப்போது ரணில் , பதில் ஜனாதிபதி என்பதால் அதை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.

6. கோட்டா கோ கம தாக்குதல் நடந்த கடந்த மே 9 இரவு , பல அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள், பிரதமர் வீட்டில் தீ பற்றி எரிந்தது போல், திடீரென அந்த வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன என சொல்கிறார்கள். இது குறித்து 4 நாட்கள் நாடாளுமன்றத்தில் அழுதாலும் புலனாய்வு விசாரணை எதுவும் இல்லை. அரசாங்கம் கூட அவர்களுடையது. மே 9ஆம் திகதி இரவு தீப்பற்றிய இரண்டு அமைச்சர்களின் வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பரிசோதகர்கள் அறிக்கைகளை வழங்கியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. சி4 மற்றும் ஒயிட் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு இரசாயனங்களை ஒன்றாகப் பயன்படுத்தி தீ மூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சாதாரண மக்களிடம் இந்த இரசாயனத்தினால் இல்லை. இவை பாதுகாப்பு படையினரிடமே உள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், அந்த இரண்டு வீடுகளின் இரசாயண அறிக்கைகள் கிடைத்தவுடன், மற்ற வீடுகளின் இரசாயண அறிக்கைகள் தேவையற்றவை என்று கூறி இடைநிறுத்தப்பட்டது. எனவே இரசாயண சோதனை அறிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிட்டது யார்? அது ஏன்?

7. மிரிஹானிலும் இதே முறையில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. தீயை மூட்டிய ‘அரபி வசந்த’ அல்லது ‘அஷந்த நலக’ அல்லது ‘சத்தா நாலக’வை நீதிமன்றத்தில் இருந்து காப்பாற்ற CID மற்றும் சட்டமா அதிபர் திணைக்களமே முன்வந்தன. அதன்படி, இந்த தீவைப்புகளுக்குப் பின்னால் அரசாங்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், மே 9ம் திகதி தீவைத்ததைப் போன்று பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்தன் பின்னணியில் ரணில் பிரதமராக இருந்த அதே அரசாங்கம்தானே?

சர்வதேச விசாரணை தேவை..
மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் ரணில் பதிலளிக்க மறுத்தால், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுவதும்,நியூஸ் பெஸ்ட் மற்றும் போராட்டக்காரர்கள் முன் சுற்றம் சுமத்திக் கொண்டிராமல் ‘தீ விபத்து குறித்து சர்வதேச விசாரணை’ தொடங்குவதும். தீவைப்பு விடயத்தை ‘சதி’ என்று சொல்வதால், அந்த ‘சதி’யின் பின்னணியில் யார் உள்ளனர் என அறிய, ரணில் நேர்மையானவராக இருந்தால், சர்வதேச விசாரணையை கோரலாம். அதற்கு ரணில் பயப்படத் தேவையில்லை. அதற்கு ஆதரவளிப்பதைத்தான் செய்ய வேண்டும். இப்போது அவர் பதில் ஜனாதிபதியாக இருப்பதால், அதைச் செய்வது, அவருக்கு முந்திரி பருப்பு சாப்பிடுவது போல் மிகவும் எளிதானது.

ரணில் மேற்கூறிய எதையும் செய்யாவிட்டால், ‘ரணில் தானே ரணிலின் வீட்டிற்கு தீ வைத்தார்’ என மக்களுக்கு முடிவு செய்ய வேண்டி வரும். எவ்வாறாயினும், இந்த சதிகள் பற்றிய உண்மையை அடுத்து வரும் மக்கள் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

-சந்திரபிரதீப் lankaenews
தமிழில் : ஜீவன்

இந்த வீடியோக்களில் ரணில் வீடு தீக்கிரையான குறித்து சந்தேகத்துக்குரிய தகவல்கள் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.