பொதுப் போக்குவரத்து கொழும்பில் வழமைக்கு….

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுப்போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று நண்பகல் 12 மணிமுதல் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் பொதுப்போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன என்று ரயில்வே திணைக்களமும், இலங்கைச் போக்குவரத்துச் சபையும் தெரிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும், இடைக்கிடையே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதால், தனியார் பஸ் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.