பதில் ஜனாதிபதி ரணில் விசேட உரை.

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது, தான் பதில் ஜனாதிபதியாக இருக்கப்போகும் குறுகிய காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இதன்படி, இந்தக் காலப்பகுதியில் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.