காக்கைக் குஞ்சுகள் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

விமல்ராஜ்ஜின் நெறியாள்கையில் உருவான “காக்கைக் குஞ்சுகள்” எனும் விளிப்புணர்வுக் குறும்பட திரையிடலும், கலந்துரையாடலும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு வளாகத்தில் இடம்பெற்றது.
வட பகுதியில், அதிலும் குறிப்பாக தீவகத்தில் நிலவுகின்ற நன்னீர்த் தட்டுப்பாடுப் பிரச்சினைக்கு தீர்வு கானக்கூடிய முன்னெடுப்பாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், மூத்த கூட்டுறவாளர் சுப்பிரமணியம் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



