புதிய ஜனாதிபதி 20 இல் தெரிவு.

புதிய ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டவும், அதன் பின்னர் 19 ஆம் திகதி வேட்புமனுக்களைக் கோரி, புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை 20ஆம் திகதி நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.