அரசை அமைக்கும் உரித்து இனி ‘மொட்டு’வுக்கு இல்லை – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு.
எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதிப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது.
எனவே, நாட்டின் எதிர்கால அரசை அமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்ற பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது” – என்றார்.