ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டலஸ் அழகப்பெரும முடிவு

அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தலுக்காக பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் அவர் அதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியதையடுத்து, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன.