“அதிமேதகு வார்த்தைக்கு தடை : கொடியும் அகற்றப்படும்” – பதில் ஜனாதிபதியின் சிறப்பு அறிக்கை (வீடியோ)
பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்தார்.
தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள குறுகிய காலத்தில் சில அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொடி ஒழிக்கப்படும் எனவும், ஒரு நாட்டில் ஒரு கொடியே இருக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் தயாரித்து தருவதாக பதில் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அமைதி வழியில் போராடுவதற்கான உரிமையை 100% ஏற்றுக் கொள்வதாகவும் அவர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது முழு அறிக்கை கீழே,