கோரவிபத்து ஐவர் பலி. சாரதி கைது
குருநாகல் கொழும்பு சாலையில் வலக்கும்புரா பகுதியில் டிப்பர் மற்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காரின் சாரதி உட்பட 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இக் கோர விபத்து நடந்துள்ளது.
ஒரு மரண வீட்டிற்கு சென்று காரில் வலக்கும்புரா நோக்கி திரும்பியவர்களே இவ் விபத்தில் பலியாகியுள்ளனர்.
விபத்து தொடர்பாக டிப்பரின் சாரதி அலவ்வா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.