முல்லைத்தீவு உதைபந்தாட்ட லீக்கின் மாபெரும் இறுதிப் போட்டயில் சம்பியனானது செம்மலை உதயசூரியன் அணி!
முல்லைத்தீவு உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்பட்ட 23 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் செம்மலை உதயசூரியன் அணி சம்பியனாகியுள்ளது
குறித்த உதைபந்தாட்ட போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நேற்று(14) மாலை முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டித் தொடரில் 20 அணிகள் கலந்துகொண்ட நிலையில் 18 போட்டிகள் இடம்பெற்று குறித்த போட்டிகளில் இருந்து கள்ளப்பாடு-உதயம் அணியும், செம்மலை – உதயசூரியன் அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேங இடம்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் போட்டி முடியும் வரை இரண்டு அணிகளும் எந்த கோல்களையும் பெறவில்லை. இறுதியில் தண்ட உதை மூலம் 03 : 02என்ற கோல் அடிப்படையில்
செம்மலை உதயசூரியன் அணி சம்பியனாகியுள்ளது.
போட்டியின் ஆட்ட நாயகனாக செம்மலை உதயசூரியன் அணியின் கு.டிசாந் அவர்களும், போட்டித்தொடரில் தொடரின் ஆட்ட நாயகனாக கள்ளப்பாடு – உதயம் அணியின் எஸ்.புகழேந்தி அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக செம்மலை உதயசூரியன் அணியின் வி.சாருஜன் அவர்களும், சிறந்த பின்கள வீரராக கள்ளப்பாடு – உதயம் அணியின் ரீ.மதுசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்களுக்கான வெற்றி கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தினை பெற்ற கள்ளப்பாடு – உதயம் அணிக்கு 20,000 ரூபா பணப் பரிசிலுடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்ட்டது.
மேலும் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் சம்பியனான செம்மலை உதயசூரியன் அணிக்கு 30, 000 ரூபா பணப் பரிசிலுடன் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.