மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தலவாக்கலை, வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா சுப்பிரமணியம் (வயது 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.