சஜித் , பிரதமராவதற்கு சுதந்திரக் கட்சியும் ஆதரவளிக்கிறது.

பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மாற்று அரசாங்கமாக கருதப்படுவதால் அவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அழைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.