உலகம் முழுவதும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..
உலகம் முழுவதும் கொரோனாவால் 56,61,85,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 53,7,565,948 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,85,560 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 38,989 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 54 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 7,57,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,61,85,141 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,68,836 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 53,75,65,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,517 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,85,560 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 94,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,11,70,571 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,48,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 107,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 33,250,117 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150,468 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனினும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.