ஓ.பன்னீர்செல்வம் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு என்பது சற்று உயர்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஓபிஎஸ் நலம் பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.