கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் திடீர் மாற்றம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட்டு புதிய பேச்சாளராக ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கொரோடாவாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவாகியுள்ளார். இதுவரை கொரோடாவாக இருந்த சிவஞானம் சிறிதரன் நீக்கப்பட்டே சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு புதிய இரு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.