இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை!
இலங்கையில் தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் உள்ளது எனச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளது எனச் சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கொரோனா பரவலானது தற்போதும் சமூகத்தில் உள்ளது. பரிசோதித்துப் பார்த்தால், அதனை அறிந்துகொள்ளலாம்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம்” – என்றார்.