ரணிலுக்கே ‘மொட்டு’ ஆதரவு; தீர்மானத்தில் மாற்றமில்லை சாகர எம்.பி. கூறுகின்றார்.
“நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றம் இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் ஊடகங்களிடம் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
“பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.