ராஜபக்சக்களுடன் சேர்ந்து பிழைப்பு நடத்திய வடக்கு – கிழக்கு ஊழல்வாதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.

வடக்கு – கிழக்கு ஊழல்வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களை உடனடியாகக் கைதுசெய்யக் கோரியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“தமிழ்ச் சமூகத்தை மலினப்படுத்தி – அடகுவைத்து ராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகளுக்குப் பின்னால் பிழைப்பு நடத்திய பலர் வடக்கு, கிழக்கில் உள்ளனர். எமது சமூகத்தை இழிவுபடுத்திய இந்த ஊழல்வாதிகள் அனைவரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டும்” – என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஊழல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.