ரஞ்சன் ராமநாயக்க சிறையை விட்டு வெளியே?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும் வேளையிலேயே அவர் சட்ட விவகாரத்துக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.