காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்.
காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஜூலை 18 திங்கட்கிழமை சந்தித்தனர்.
கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடலில் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்தித்தோம் .
மேலும், காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயல்திட்டத்தை ‘ எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டதாக குறிப்பிட்டார்.