எரிபொருள் விநியோகிப்பதற்கான திகதிகளில் மாற்றம்!
வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இதன்படி, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனி கிழமை
3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமை
6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்துக்காக பதிவு செய்துள்ளதாகவும் பதிவுகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 21 முதல் கொழும்பின் பல இடங்களில் எரிபொருள் பெறுவதற்காக QR குறியீட்டு திட்டத்துடன் இணைத்து இலக்கத்தகட்டின் இறுதி இலக்க திட்டமும் பரிசோதிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டு திட்டம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.