ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவு : தயாசிறி ஜயசேகர (Video)

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மத்திய குழு இன்று (19) கூடி இதனை தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர , கட்சியில் உள்ள 9 பேரும் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.