ரணில் வெற்றி! – மண்கவ்வினார் டலஸ்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.
ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தெரிவுக்காகப் போட்டியிட்டனர்.
இந்த மூவரில் ரணில் மற்றும் டலஸ் ஆகியோருக்கு வாக்களிக்கவுள்ளதாகப் பல கட்சிகளும் நேற்றுக் காலை முதல் இன்று காலை வரை தமது நிலைப்பாட்டை வெளியிட்டு வந்தன.
இந்தநிலையில், இன்று முற்பகல் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
223 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இதேவேளை, டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.