டலஸை போட்டியிட வைத்து வாக்கும் போட்டோம், அவர் தோற்றுப் போனார் : மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ)
டலஸ் அலகப்பெருமவை போட்டியிட வைத்தோம், வாக்கும் போட்டோம், அவர் தோற்றுப் போனார்
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் டல்லஸை போட்டியிட வைத்தோம். நாங்கள் வாக்கும் அளித்தோம். தோற்று போனோம். யாராவது வெற்றி பெற வேண்டும்.”
“அவர் அதிக வாக்குகளைப் பெற்றார்… அவர் ஜனாதிபதியானார். அதுதான் நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.”
“பல்வேறு கருத்துக்கள் உள்ளன, இது மக்களின் கருத்து அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். இது மக்களின் கருத்து என்று நாங்கள் கூறுகிறோம்.”
“இப்போது போராட்டம் முடிந்துவிட்டதாக நினைக்கிறேன். காலிமுகத் திடலில் போராடும் இளைஞர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வேலை செய்யுங்கள்.”
ஊடகவியலாளர் – ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்தீர்களா?
மஹிந்த ராஜபக்ஷ – “இல்லை.. இல்லை.”
ஊடகவியலாளர் – எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் தலையீடு வருமா?
மகிந்த ராஜபக்ச – “நாங்கள் இன்னும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை. கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் நான் உடன்படுகிறேன்.”