தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு சஜித் அணியிலிருந்தும் 14 பேர் நேசக்கரம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஐவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் என்று முன்னாள் அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 14 எம்.பிக்கள் வரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினர் எனவும் அவர் கூறினார்.
இதில் 8 பேர் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவாக 134 எம்.பிக்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.