ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் ரணில் விக்கிரம சிங்க.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறுகிறது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றுள்ளனர்.
பின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.