ரணில் சத்தியப்பிரமாணம் செய்யும் போது பாராளுமன்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது! நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்!
ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்யும் போது பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவை சுயாதீன தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.
சிவப்பு கம்பளத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியவில்லை.