ஜனநாயகம்-பொறுப்புக்கூறலை வலுப்படுத்துங்கள்! புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவேன் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“இந்த சவாலான காலங்களில், அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது மற்றும் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது கட்டாயமாகும்.” அவர் தனது ட்விட்டர் செய்தியில் மேலும் தெரிவித்தார்
We look forward to working with new President @RW_UNP
In these challenging times, it will be essential for all parties to redouble efforts to work together to tackle the economic crisis, uphold democracy & accountability, and build a stable & secure future for all Sri Lankans.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 21, 2022