கேரளாவை போன்று தமிழகத்திலும் தனியார் டாக்சி சேவையில் மாற்று செயலி உருவாக்க வேண்டும் – கமல்ஹாசன்
கேரளாவை போன்று தமிழகத்திலும் தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக அரசு உதவியுடன் தனியார் பொதுமக்கள் செயலி உருவாக்கப்பட வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு ‘கேரளா சவாரி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்திலும் அரசு உதவியுடன், தனியார் பொதுமக்கள் (PPP) பங்கேற்புடன் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் நியாயமான கட்டணத்தில் பயணிப்பதையும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு நியாயமான லாபம் கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.