சிங்கப்பூரில் கோட்டாவுக்கு 15 நாட்களுக்கான குறுகிய கால விசா.

இம்மாதம் 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டது எனச் சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்டது எனச் செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாக இலங்கையர்களுக்கு 30 நாட்களுக்கு விசாவை நீடிக்க முடியும் எனவும், அதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.