உணவு ஒவ்வாமை காரணமாக திருமலையில் 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு.

திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 11 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனார்.
தலைக்குப் பூசுகின்ற திரவம் கலந்த எண்ணெய் தவறுதலாகச் சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்டமையால், குறித்த சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.