ஜனாதிபதி ரணிலை சந்திக்கச் சென்ற அமெரிக்க தூதுவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்து சொன்னது என்ன?
இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அரச வன்முறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது தனது அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்க வேண்டிய தருணம் இதுவல்ல, மாறாக இது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான தருணம் என அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
(1/2) Just met w/ President @RW_UNP to express my grave concern over the unnecessary & deeply troubling escalation of violence against protesters overnight.
The President & cabinet have an opportunity and an obligation to respond to the calls of Sri Lankans for a better future.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 22, 2022