நாடாளுமன்றம் வருகிறார் வஜிர – வெளிவந்தது வர்த்தமானி.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வஜிர அபேவர்தனவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து விசேட வர்த்தமானியும் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.