ரணில் அரசுடன் சங்கமிப்பர் சஜித் அணி உறுப்பினர்கள்! அமைச்சர் ஹரின் நம்பிக்கை.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசுடன் இணைவார்கள் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்துதான் போராட்டக்காரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ‘கோல்பேஸ்’ போராட்டக்களம் அகற்றப்படவில்லை. போராட்டக்காரர்களின் இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
புதிய ஜனாதிபதி தற்போது நியமித்துள்ள அமைச்சரவை தற்காலிக அமைச்சரவைதான். சர்வகட்சி அரசொன்றை அமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதில் இணைவார்கள்” – என்றார்.