யாழில் எரிபொருள் அட்டையைப் பெற காத்திருந்தவர் மயங்கி விழுந்து சாவு!.

யாழ்., ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையைப் பெறக் காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
வேலணை, புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று தனக்கான எரிபொருள் அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்துக்குச் சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கிச் சரிந்துள்ளார்.
அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.