யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மோட்டார் குண்டுகள்
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் நேற்று மாலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் அப்பகுதில் உள்ளவர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் குறித்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.